கிரிக்கெட்

கோவாவில் 2027 ஐபிஎல் வீரர்கள் ஏலம்

ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.

மும்பை,

ஐபிஎல் 2027-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார்.இதன் மூலம் ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.

கடந்த 3 சீசன்களில் ஐபிஎல் ஏலம் வெளிநாடுகளில் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு ஏலம் துபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது.

இந்நிலையில், 2027-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தை கோவாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT