புதுச்சேரி,
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 49.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணி தரப்பில் ரஜத் படிதார் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அனுகுல் ராய் ஆட்டமிழக்காமல் 34 ரன்களும், விப்ராஜ் நிகம் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.
இறுதியில் இந்தியா ஏ அணி 45.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஏ அணி தொடரைக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் விளையாடிய இந்தியா ஏ அணிக்கு இந்த தோல்வி ஏமாற்றமாக அமைந்தது.