கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்

மிர்புர்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மிர்புரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ் தான் 114 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே " மைதானத்தில் இன்று (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.