வதோதரா,
இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 198 ரன் இலக்கை இந்திய அணி 27.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பிரதிகா ராவத் சதமும், ஷபாலி வர்மா அரை சதமும் அடித்தனர். கேப்டன் ஸ்மிர்தி மந்தனா தன்பங்குக்கு 32 ரன்கள் எடுத் தார். பந்து வீச்சில் ஸ்ரீசரனி (4 விக்கெட்), கிராந்தி கவுட், தீப்தி ஷர்மா சிறப் பாக செயல்பட்டனர். பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமா னதாகும். இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை கைப்பற் றும் முனைப்பில் உள்ளது.
ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் 197 ரன்னில் அடங்கியது. அந்த அணியின் இளம் வீராங்கனை பிசா (62 ரன்) தாக்குப்பிடித்து ஆடினார். மோடெஸ்டர் முபாச்சிக்வா, மிச்செல் மவுங்கா ஓரளவு ரன் சேர்த்தனர். கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக கேப்டன் என்கோமா ஆடவில்லை. இதனால் துணை கேப்டன் சிபந்தா கேப்டன் பொறுப்பை கவனித் தார். காயத்தில் இருந்து மீண்டு வரும் கேப்டன் என்கோமா இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. வலுவான இந்திய அணியின் சவாலை சமாளிப்பது என்பது ஜிம்பாப்வே அணிக்கு எளிதான காரியமாக இருக் காது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.