தர்மசாலா.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்தியா தீவிரம் காட்டும். தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் அணி முனைப்பு காட்டும்.