கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

கவுகாத்தி,

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் திருவனந்தபுரத்தில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய வெஸ்ட் இண்டீசும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

SCROLL FOR NEXT