கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

முதல் ஆட்டத்தைப் போன்று ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

கவுகாத்தி,

2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

முன்னிலை

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சுப்மன் கில், விராட் கோலியின் சதமும், குல்தீப் யாதவின் சுழலும் வெற்றியை இந்தியாவுக்கு எளிதாக்கியது.

2-வது ஒருநாள்

இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

பதிலடி

முதல் ஆட்டத்தைப் போன்று ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். அதே சமயம், சரிவிலிருந்து மீண்டு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

SCROLL FOR NEXT