கேப் டவுன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றூப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளை விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் குவித்தது. டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 142 ரன்கள் எடுத்தார். கேப்டன் பவுமா 103 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் எட்வெர்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 366 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை கைப்பற்றியது.