கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி

இலங்கை அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

கொழும்பு,

19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் 2-வது ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந் திய அணி 47.2 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகனான அன்வே டிராவிட் 87 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 48 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் திமந்தா மதவிதனா 155 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.