கிரிக்கெட்

2வது டி20: வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலியா

வங்காளாதேசம் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டாக்கா,

2-வது டி20 போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது.டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. மேட் ரென்ஷா அதிரடியாக ஆடி 52 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 26 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளாதேசம் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.