கிரிக்கெட்

2வது டி20: வங்காளதேசம் - ஆஸ்திரேலியா நாளை மோதல்

ஆஸ்திரேலியா வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளிக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டும். அதேவேளை தோல்விக்கு பதிலடி கொடுக்க வங்காளதேச அணி முயற்சிக்கும்.