ராய்ப்பூர்,
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 114 ரன்னில் கட்டுப்படுத்திய இந்திய அணி. இலக்கை விரட்டுகையில் 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு அறிமுக வீராங்கனை நிக்கி பிரசாத் (39 ரன், நாட்-அவுட்), தீப்தி ஷர்மா (49 ரன்) இணை 82 ரன்கள் திரட்டி அணி யின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணியின் 'டாப்-4' வரிசை பேட்டர்க ளான கேப்டன் மந்தனா, ஷபாலி வர்மா, அனுஷ்கா ஷர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தனர். இது குறித்து போட்டிக்கு பிறகு இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா கருத்து தெரிவிக்கையில், 'நாங்கள் ஆக்ரோஷமான பாணியில் விளையாட விரும்புகி றோம். சில சமயங்களில் இதுபோன்ற விஷயங்கள் (விக்கெட் சரிவு) நடப்பது உண்டு. ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இதுபோல் அடுத்த ஆட்டத்தில் நடக்காது' என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடி தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தும்.