லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து அணி களம் இறங்குவதற்குள் மழை புகுந்து விளையாடியது. நீண்ட நேரம் கனமழை பெய்ததால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மான்செஸ்டர் சென்றடைந்துள்னனர். மான்செஸ்டரில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.