கிரிக்கெட்

2-வது டி20 போட்டி: இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

இளம் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி வெளியே தான் இருக்க வேண்டி இருக்கும்.

ராஞ்சி,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி ஜார் கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 171 ரன்னில் கட்டுப்படுத்திய இந்தியா அந்த இலக்கை 14.4 ஓவர் களிலேயே விரட்டிப்பிடித்தது.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 102 ரன்கள் விளாசியதுடன், மூன்று வடிவிலான சர்வதேச போட்டியிலும் சதம் அடித்த 7-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். பந்து வீச்சில் நமன் திர் (3 விக் கெட்), அக்ஷர் பட்டேல் (2), குல்தீப் யாதவ் (2) கலக்கினர். சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்றுள்ள இந்தியா அந்த வீறுநடையை தொடரும் உத்வேகத்துடன் களம் காணுகிறது. அணி யில் அனேகமாக மாற்றம் இருக்காது. இதனால் இளம் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி வெளியே தான் இருக்க வேண்டி இருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் தடாலடி பேட்டர்கள் பலர் இருந்தாலும் முதல் ஆட்டத்தில் கேப்டன் ஷாய் ஹோப் (52 ரன்), ரூதர்போர்டு (56 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்த முறை தவறுகளை திருத்திக் கொண்டு கூடுதல் விழிப்போடு ஆடுவார்கள் என நம்பலாம். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 12 ஆட்டங்களில் ஆடி 2-ல் மட் டுமே வெற்றி பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த சோகத்துக்கு முடிவு கட்ட முயற்சிப்பார்கள்.

போட்டி நடக்கும் ராஞ்சியில் இதுவரை நான்கு ஆட்டங்கள் நடந் துள்ளன. இதில் இந்தியா 3-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள் ளது. 2016-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா 196 ரன்கள் எடுத் தது இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். ராஞ்சி மைதானத்தில் இரவு நேர 20 ஓவர் ஆட்டங்கள் (உள்ளூர் போட்டியையும் சேர்த்து) அரிதாகவே நடப்பதால், இதன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினமே.

SCROLL FOR NEXT