செஞ்சூரியன்,
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று 1-0 என முன்னிலை வகித்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சூரியனின் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது.ஹெட்மயர் 75 ரன்னும், ரூதர்போர்டு 57 ரன்னும் குவித்தனர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டிகாக் 115 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 36 பந்தில் 77 ரன்னும் குவித்தனர். இதன்மூலம் டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.