கொழும்பு,
இலங்கை, பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது.
இந்நிலையில், இலங்கை - பாகிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. தம்புலாவில் உள்ள மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இலங்கையும், அதேவேளை, போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய பாகிஸ்தானும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.