ஹராரே,
ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத் தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 போட்டி அதே ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.