கிரிக்கெட்

2-வது டி20: சஞ்சு சாம்சன் அதிரடி... வெஸ்ட் இண்டீஸுக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஞ்சி,

2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.

2-வது டி20

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றநிலையில், இரு அணிகளுக்கிடையிலான 2-வது டி20 போட்டி ஜார் கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம்

இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.

திலக் வர்மா 18 பந்துகளில் 44 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 40 ரன்களும் விளாசினர். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணி 249 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT