ராஞ்சி,
2-வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி ஜார் கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கான் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.