ராய்ப்பூர்,
2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் நடந்து வருகிறது.
இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதற்கிடையில், இந்தியா-ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.