கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: வங்காளதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

2-வது டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் இன்று தொடங்குகிறது.

மெக்காய்,

நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டார்வினில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரே லியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த வங்காளதேசம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டிகான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.