கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராட்டம்

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்த அந்த அணி 42.3 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து 'பாலோ-ஆன்' ஆனது.

கெபேஹா,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்னில் சுருண்டு தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கெபேஹாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவின் சதத்தால் (179 ரன்) முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 429 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன் னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 3 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. விக்கெட்டுகளை மளம ளவென பறிகொடுத்த அந்த அணி 42.3 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து 'பாலோ-ஆன்' ஆனது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆல்-அவுட் ஆன இன் னிங்சில் ஆஸ்திரேலியாவின் 4-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 28 ரன் எடுத்தார். இந்த ஸ்கோருடன் சுமித், டெஸ்டில் 11 ஆயி ரம் ரன்களை கடந்த 12-வது வீரர் ஆஸ்திரேலிய அளவில் 3-வது வீரர் (ஏற்கனவே ஆலன் பார்டர், ரிக்கிபாண்டிங்) என்ற சாதனையை படைத்தார்.

தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ யான்சென் 5 விக்கெட்டும், வியான் முல்டர், ரபடா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT