மெக்காய்,
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டார்வினில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரே லியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த வங்காளதேசம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மெக் காய் நகரில் இன்று தொடங்குகிறது. வங்காளதேசத்துக்கு எதிரான தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளியில் சறுக்கலை சந்தித்த கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரே லியா முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு முதல்முறையாக தொடரை கைப் பற்ற வங்காளதேச அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.