கிரிக்கெட்

2வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கெபேகா,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேகா வில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

SCROLL FOR NEXT