லண்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
லண்டன் லார்ட்சில் தற்போது மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.