கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.