கிரிக்கெட்

2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

253 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

லண்டன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 391 ரன்களும், இங்கிலாந்து 291 ரன்களும் எடுத்தன. 100 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து 362 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹென்றி நிகோல்ஸ் 121 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 463 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 48 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதல் நியூசிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. இதனால் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 58.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. இதனால் 253 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1என சமனில் உள்ளது.