கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன் னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

கெபேஹா,

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 18-ந்தேதி கெபேஹாவில் தொடங்கியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 425 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 99 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பின்னர் 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் (87 ரன்), ஸ்காட் போலன்ட் (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மழை யால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. டிரா செய்யும் முனைப்புடன் ஹெட்டும், போலன்டும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்த ஹெட் 121 ரன்களில் (190 பந்து, 15 பவுண்டரி) ரபடாவின் பந்தில் போல்டானார். இதன் பின்னர் போலன்ட் (40 ரன், 166 பந்து). அலெக்ஸ் கேரி (37 ரன், 69 பந்து) ஆகியோரது போராட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 107.1 ஓவர்களில் 295 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன் னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ககிசோ ரபடா 4 விக்கெட்டும், வியான் முல்டர் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட் டியுள்ளது.

SCROLL FOR NEXT