கெபேகா,
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேகா வில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஜோராக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் கள் நிக் மேடின்சன், டிராவிஸ் ஹெட் விரைவில் ஆட்டமிழந்தாலும், மேட் ரென்ஷா (190, 82 ரன்) இரு இன்னிங்சிலும் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது பெற்றதுடன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், கேப்டன் கம்மின்ஸ் பயனுள்ள பங்களிப்பை அளித்தனர். பந்து வீச்சில் ஹேசில்வுட் கலக்கினார். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோரும் கச்சிதமாக பந்து வீசினார்கள்.
கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியிடம் கண்ட தோல் விக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா தனது உத்வேகத்தை தொடர்ந்து தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள் ளது.
முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் மார்க்ரம். டேவிட் பெடிங்ஹாம் தவிர யாரும் தாக்குப்பி டிக்கவில்லை. ரையான் ரிக்கெல்டன் (0, 2 ரன்), கேப்டன் பவுமா (3, 1 ரன்) ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டி ஏமாற்றம் அளித்தனர். எனவே பேட்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சை குறை சொல்ல முடியாது. மார்கோ யான்சென், வியான் முல்டர், அன்ரிச் நோர்டியா, சைமன் ஹார்மன், கேஷவ் மகராஜ் நேர்த்தியாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். பவுமா தலைமையில் டெஸ்டில் முதல் தோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்க அணி தனது தவறுகளை திருத்தி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க முனைப்பு காட்டும்.
சமபலம் வாய்ந்த அணிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணி களும் இதுவரை 103 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 55-ல் ஆஸ்திரேலியாவும், 27-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 21 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. கெபேகா மைதானத்தில் ஆஸ்திரே லிய அணி 7 டெஸ்டில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.