வங்கதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 5) சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதனால் தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணி களமிறங்குகிறது. மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி அல்லது டிரா மூலம் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.