Image Courtesy: PTI 
கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய 'ஏ' அணி வெற்றி

இந்தியா 'ஏ'-நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியா 'ஏ'-நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 'ஏ' 47 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதில் 47-வது ஓவரில் அவர் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததும் அடங்கும். தொடர்ந்து ஆடிய இந்திய 'ஏ' அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

பிரித்வி ஷா 77 ரன்கள் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு