கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு

முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

ஹராரே,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

டாஸ்

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

SCROLL FOR NEXT