கிரிக்கெட்

2வது டி20: இங்கிலாந்து - இலங்கை நாளை மோதல்

இங்கிலாந்து 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இங்கிலாந்து - இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து, இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

2வது டி20

இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நாளைய போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

SCROLL FOR NEXT