கிரிக்கெட்

யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா வரிசையில் இஷான் கிஷன் - டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு,

இந்திய வீரர் இஷான் கிஷன், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா வரிசையில் இணைந்துள்ளார்.

10 பந்துகளில் 30 ரன்கள்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதிய கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி மழை காரணமாக தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டநிலையில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதயடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 300.

யுவராஜ், ஹார்திக், ரிங்கு வரிசையில் இஷான்

இதன் மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் குறைந்தது 30 ரன்கள் எடுத்து, அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய இந்திய வீரர்களில் யுவராஜ் சிங், ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், அபிஷேக் சர்மா ஆகியோருடன் இஷான் கிஷன் இணைந்துள்ளார்.

2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 16 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். மற்ற ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். அபிஷேக் சர்மாவும் தனது அதிரடியான ஆட்டங்கள் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த இஷான் கிஷனும், 300 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த அதிரடி வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

மழையால் கைவிடப்பட்ட போட்டி

இபோட்டியில் இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

SCROLL FOR NEXT