சென்னை,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6 லீக் ஆட்டம் மற்றும் ஒரு சூப்பர் 8 சுற்று போட்டி என ஆக மொத்தம் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
இதில் இதுவரை 2 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ள நிலையில் 3-வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.இதில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த 2 போட்டிகளுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் நேரில் கண்டுகளித்து மிகப்பெரிய ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்கது.