ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (நவம்பர் 18) ஹோபார்ட்டில் உள்ள பெல்லரைவ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து அணி 2-வது ஆட்டத்தில் 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்பிட் இங்க்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.