கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி - வைஷ்ணவி அசத்தல் பந்துவீச்சு... ஜிம்பாப்வே அணியை 131 ரன்களில் சுருட்டிய இந்தியா

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வதேரா,

3-வது ஒருநாள் போட்டியில் வைஷ்ணவி சர்மாவின் அசத்தல் பந்துவீச்சு காராணமாக ஜிம்பாப்வே அணியை 131 ரன்களில் இந்தியா சுருட்டியது.

பேட்டிங்

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

131 ரன்கள்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வைஷ்ணவி சர்மா

இந்திய அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வைஷ்ணவி சர்மா தனது பந்துவீச்சால் ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஒருநாள் போட்டிகளில் தனது முதல் ஐந்து விக்கெட் சாதனையை அவர் பதிவு செய்தார்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும்.

SCROLL FOR NEXT