கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு 276 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா ’ஏ’

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

புதுச்சேரி,

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு 276 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் பேட்டிங்

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 47.3 ஓவர்களில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா ஏ அணியில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிகபட்சமாக 60 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். பிரியன்ஷ் ஆர்யா 45 பந்துகளில் 49 ரன்களும், விப்ராஜ் நிகம் 44 பந்துகளில் 40 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா ஏ

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற அந்த அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது.

தொடரை இழந்துள்ள இந்தியா ஏ அணி, கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றும் நிலையில் உள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலியா ஏ அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT