கிரிக்கெட்

3வது ஒருநாள் போட்டி: இந்திய வீரர் விலகல்

தொடர் 1-1 என சமன் ஆனது.

பர்மிங்காம்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமன் ஆனது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 3வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.