கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதல்

முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாகூர்,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலை யில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் சமனில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும்.