கிரிக்கெட்

3வது டி20: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார்

பல்லேகலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இங்கிலாந்து:

பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், ஹாரி புரூக், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், லூக் வுட், அடில் ரஷித்.

இலங்கை:

பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, மஹேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, மதீஷா பதிரனா.

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது

சவுதி அரேபியா சென்ற அஜித் தோவலுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு

2025-ல் இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் ரூ.14.06 லட்சம் கோடி

இரு விமானங்கள் உரசி விபத்து.. மும்பையில் பரபரப்பு