நாட்டிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டி கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஸ்டர் லீ ஸ்டீரிட்டில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மான்செஸ்டரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் இடையி லான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.