கிரிக்கெட்

3வது டி20: ஜிம்பாப்வே - வங்காளதேசம் இன்று மோதல்

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

ஹராரே,

வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.

3வது டி20

இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காளதேசம் இடையேயான 3வது, கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.