ராய்ப்பூர்,
3-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ளது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2-வது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 69 ரன்களும், அனுஷ்கா சர்மா 28 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தனர்.
அதன்பின் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.