கிரிக்கெட்

3-வது டெஸ்ட்: நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிராக இந்தியா 'ஏ' 227/2

இந்திய அணி 69.3 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.

நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால்

லிங்கனில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து 'ஏ' அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 138 பந்துகளில் 102 ரன்கள் விளாசி சதம் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சன் நிதானமாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு சிறப்பான கூட்டணியை அமைத்தது.

பின்னர் களமிறங்கிய கேப்டன் துருவ் ஜூரெல் ஆட்ட நேர முடிவில் 8 ரன்களுடனும், சாய் சுதர்சன் 76 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 69.3 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து 'ஏ' அணியின் டான்ரூ ஃபெர்ன்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்

SCROLL FOR NEXT