கிரிக்கெட்

4வது ஒரு நாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 290 ரன்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

ஜோகன்னெஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் (5) ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் 18.2வது ஓவரில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து தவானுடன் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோஹ்லி 21.2வது ஓவரில் அரை சதம் அடித்துள்ளார். இந்த நிலையில் ஷிகர் தவான் 33.1வது ஓவரில் தனது 100வது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

கோஹ்லி (75) 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் ஆட்டமிழந்துள்ளார். இந்த நிலையில், தவான் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்களுடனும், ரஹானே (8) ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஷ்ரேயாஸ் சந்தோஷ் (18), பாண்ட்யா (9), புவனேஷ்குமார் (5) ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனி (42) மற்றும் குல்தீப் யாதவ் (0) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 290 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.