கிரிக்கெட்

4-வது ஒருநாள் போட்டி: வில் யங் சதம்... நியூசிலாந்து அணி 333 ரன்கள் குவிப்பு!

நியூசிலாந்து அணி, வில் யங்கின் அபார சதத்தின் உதவியுடன் 333 ரன்கள் குவித்தது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, வில் யங்கின் அபார சதத்தின் உதவியுடன் 333 ரன்கள் குவித்தது.

வில் யங்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங், டிம் சீபெர்ட் இருவரும் இந்திய பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், டிம் சீஃபெர்ட் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்திருந்தபோது குர்னூர் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக் கெல்லி 4 ரன்களிலும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 8 ரன்களிலும் வெளியேறினர்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வில் யங், இந்திய பந்துவீச்சாளர்களைச் சமாளித்து ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்த ஃபின் ஆலனும் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ஆலனை ரோஹித் சர்மா அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து வில் யங் தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.இறுதியில் நியூசிலாந்து அணி 333 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது.

இந்திய அணி

இந்திய அணி தரப்பில் அக்சர் படேல்,குர்னூர் பிரார் மற்றும் அவ்கிப் நபி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT