கிரிக்கெட்

4-வது டி20 - வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

ஐதராபாத்,

4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

முன்னிலை

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டாஸ்

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

ரன் விருந்து

ஐதராபாத்தும் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியான ஒரு ஆடுகளமாகும். 2024-ம் ஆண்டில் இந்திய அணி இங்கு வங்காளதேசத்துக்கு எதிராக 297 ரன்கள் குவித்ததே அதற்கு சான்று.

அதனால் முந்தைய ஆட்டங்களை போன்றே ரசிகர்களுக்கு இங்கும் ரன் விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

SCROLL FOR NEXT