கிரிக்கெட்

4வது டி20 - கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்... இந்தியாவுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆக்லாந்து,

4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

3-0

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 3 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

260 ரன்கள் இலக்கு

இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஆக்லாந்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில், அதிரடியாக ஆடிய பிலிப்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 49 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.

மற்றொரு வீரர் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

SCROLL FOR NEXT