கிரிக்கெட்

4-வது டி20 : ஷாய் ஹோப் அதிரடி சதம்... இந்தியாவுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐதராபாத்,

4-வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

முன்னிலை

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டாஸ்

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஷாய் ஹோப் அதிரடி

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடினார். அவர் 50 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

மற்றொரு வீரர் ரூதர்போர்டு 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும், ஷிம்ரன் ஹெட்மையர் 12 பந்துகளில் 33 ரன்களும், ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.

248 ரன்கள்

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அக்சர் படேல், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 248 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது.

SCROLL FOR NEXT